சினிமா

சர்ச்சையான படத்தில் நடிக்கும் பிக்பாஸ் பாலாஜி… பரபர அப்டேட்….

Published

on

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ். மாடலாக இருக்கும் உடலை ஃபிட்டாக வைத்திருப்பார். எனவே, இவரை பயில்வான் என நெட்டிசன்கள் அழைத்து வந்தனர். மேலும், அந்த சீசனில் சிறப்பாக விளையாடிய நடிகர் ஆரியிடம் அடிக்கடி சண்டை போட்டு ரசிகர்களை எரிச்சலாக்கியதும் இவர்தான்.

இறுதிபோட்டியில் ஆரியா, பாலாஜி என நின்ற போது ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலாஜி 2வது இடத்தை பிடித்தார்.மேலும், பிக்பாஸ் வீட்டில் ஷிவானியுடன் அவ்வப்போது ரொமான்ஸிலும் ஈடுபட்டார்.

இந்நிலையில், ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் பாலாஜி நடிக்கவுள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்த ரவீந்தர் ‘நாங்கள் எடுக்கவுள்ள சர்ச்சையான படத்தில் பாலாஜி முருகதாஸ் நடிக்கவுள்ளார். முழுக்க அன்போடு, நல்ல நடிகராக உங்களை அவர் மகிழ்விப்பார். அவரை ஆசிர்வதியுங்கள்’ என பதிவிட்டுள்ளர்.

இதையடுத்து பாலாஜிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version