சினிமா செய்திகள்

திடீரென காணாமல் போன பிக்பாஸ் நடிகையின் கணவர்: எங்கே சென்றார்?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரான நடிகையின் கணவர் திடீரென காணாமல் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரான காமெடி நடிகை ஆர்த்தியின் கணவரும் நடிகருமான கணேஷ்கர் சென்னை பட்டினப்பாக்கம் சாலையில் தனது காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி உள்ளது. இதனால் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் கூட்டம் கூடி விட்டதால் கணேஷ்கர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நடிகை ஆரத்தி தனது கணவர் வீடு திரும்பவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த போது இந்த விபத்து போக்குவரத்து துறை போலீஸார் மூலம் காவல்துறையினருக்கு தெரியவந்தது.

விபத்துக்குள்ளான கார் தனது கணவரின் கார் தான் என உறுதி செய்த ஆர்த்தி தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கணேஷ்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எங்கிருக்கிறார் என்பது உடனடியாக கண்டுபிடிக்க குழு அமைக்கப்படும் என காவல்துறையினர் கூறியிருப்பதாக தெரிகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version