சினிமா செய்திகள்

தொடங்கியது பிக்பாஸ் 3; தொகுப்பாளர் யார் தெரியுமா?

Published

on

பிக்பாஸ் 3 படப்பிடிப்பு இன்று சென்னை இவிபி படப்பிடிப்பு தளத்தில் தொடங்கியது. நடிகர் கமல்ஹாசனே மூன்றாவது சீசன் பிக்பாஸையும் தொகுத்து வழங்கும் தகவல் கிடைத்துள்ளது.

2017ம் ஆண்டு தமிழில் பிக்பாஸ் எனும் ரியாலிட்டி ஷோ அறிமுகமானது. வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வந்த இந்த ஷோ, பாலிவுட்டில் பத்து வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால், இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் கவனம் கிடைத்தது. முதல் சீசனில் ஓவியாவுக்கு ஆர்மி எல்லாம் உருவாக்கப்பட்டது.

இரண்டாவது சீசனில் யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தாவின் கவர்ச்சி அட்டகாசங்கள் களைகட்டின.

அரசியல் கட்சியை ஆரம்பித்து விட்டதால், மூன்றாவது சீசனில் கமலுக்கு பதில் அரவிந்த்சாமி தொகுத்து வழங்குவார் என்ற செய்தி அடிபட்ட நிலையில், மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார் என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை இவிபியில் இன்று பிக்பாஸ் வீடு செட் அமைக்கப்பட்டு கமல்ஹாசனின் ஷூட்டிங் நடத்தப்பட்ட தகவல் கசிந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version