சினிமா

“இதய துடிப்பு செக் பண்றீங்களா..?”- ‘பிக் பாஸில்’ எவிக்ட் ஆவது யார்..?- கமல் கொடுத்த பன்ச்!!

Published

on

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை வாரத்துக்கு ஒருவர் எவிக்ட் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என்று ஷோவின் ஹோஸ்ட் கமல்ஹாசன் நேற்று அறிவித்தார். இதனால் போட்டியாளர்கள் அதிர்ந்து போனார்கள்.

ஏன் இந்த வாரம் இரண்டு எவிக்‌ஷன் என்பது குறித்து கமல் கூறும்போது, ‘இது ஒவ்வொருவரும் தனியாக விளையாட வேண்டிய போட்டி. இதில் குழுவாக இணைந்து செயல்படக் கூடாது என்று பலமுறை சொல்லியிருந்தோம். ஆனால், அதை சிலர் கேட்பதாக தெரிவதில்லை. கூட்டமாக விளையாடியவர்கள் கூட்டமாகத்தானே வெளியேறுவார்கள்?’ என்று தெரிவித்தார். எப்போதும், ஞாயிற்றுக் கிழமைதான் யார் எவிக்ட் செய்யப்படுகிறார் என்பது குறித்து கமல் அறிவிப்பார். ஆனால், இந்த முறை இரண்டு எவிக்‌ஷன் என்பதனால் சனிக்கிழமையே ‘ஜித்தன்’ ரமேஷ் வெளியேற்றப்படுகிறார் என்று கமல் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று விஜய் டிவி சார்பில் வெளியிடப்பட்ட பிக் பாஸ் ஷோ டீசரில், எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள சோம், நிஷா, கேப்ரியல், ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து கமல், ‘இந்த முறை யார் காப்பாற்றப்படுகிறார் என்பதை முதலில் அறிவிப்போமா? அல்லது, யார் வெளியேற்றப்படுகிறார் என்பதை முதலில் அறிவிப்போமா?’ என்கு கூறி ஒரு இடைவெளிவிட்டு, ‘என்ன இதய துடிப்பு செக் பண்றீங்களா?’ எனக் கேட்பதோடு டீசர் முடிகிறது. இதனால் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கான ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

Trending

Exit mobile version