டிவி

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்‌ஷனுக்கு நாமிஷேன் செய்யப்பட்டவர்கள் இவர்கள்தான்!

Published

on

பிக்பாஸ் வீட்டில் இந்த வார இறுதியில் நடக்க உள்ள எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் இன்று நடைபெற்றுள்ளது.

இந்த சீசனில் எவிக்‌ஷனுக்கு தேர்ந்தெடுக்கும் முறை வாரா வாரம் மாறுகிறது. இந்த முறை எப்படி நாமினேஷன் செய்யப்பட்டார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இன்றைய முதல் ப்ரோமோவில், பிக்பாஸ் யார் எல்லாம் நாமினேஷனில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்று அறிவிக்கிறார்.

அதில் பலரின் பெயர் அங்கு இருப்பவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. முதலில் கேப்ரியல்லா என தொடங்குகிறது. உடனே அங்கு உள்ளவர்கள் அனைவரும் ஷாக் ஆகின்றனர். அவரை தொடர்ந்து சம்யுக்தா, சுச்சித்ரா, அனிதா, ஷிவானி, அர்ச்சனா, பாலாஜி, ரம்யா, ஆஜித் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் நாமிஷேனில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளது என்று தெரிந்த உடன், போட்டியாளர்களின் முகம் மாறும். ஆனால் இந்த முறை எல்லோரும் சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

பிக்பாஸ் எப்படி இந்த நாமினேஷனை செய்திருப்பார் என்று இன்று இரவு பார்ப்போம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version