டிவி

பிக்பாஸ்: ஷிவானியை சீண்டும் ஆரி.. நிதானமாகச் சூடு பிடிக்கும் பிக்பாஸ்!

Published

on

பிக்பாஸ் சீசன் ஒன்று போலவே, பிக்பாஸ் சீசன் நான்கிலும் பெட்டிலிருந்து பிரிவினை தொடங்கியுள்ளது கூறலாம் போல.

ஷிவானி வருவதற்கு முன்பே சனம் ஷெட்டி, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டவர்கள், பிக்பாஸ் வீட்டில் வந்து இருந்தாலும், ஷிவானி ஒரு தனியாகப் படுக்கக் கூடிய பெட்டை தேர்ந்தெடுத்து துண்டு போடுவது போல சானிடைசரை வைத்ததாகவும், ஆனால் அது தெரியாமல் சம்யூக்தா ஹெக்டே மற்றும் சனம் ஷெட்டி உள்ளிட்டோர் அந்த பெட்டை சொந்தம் கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றிய வீடியோ பிக்பாஸின் 1 மணி நேர சுருக்கத்தில் வராத நிலையில், நேற்று தொடங்கிய எலிமினேஷனுக்கான சோதனை விளையாட்டில் ஷிவானி டார்கெட் செய்தனர்.

தனக்குப் பிடித்தவர்களுக்கு இதயம் சீலும், தன்னுடன் இன்னும் நெருங்கி பலக்காதவர்களுக்கு, தங்களது எதிர்பார்ப்புக்கு எதிராக இருந்தவர்களுக்கு உடைந்த இதயம் கொண்ட சீல் வைக்கும் எலிமினேஷனுக்கான ஒரு முன்னோட்டம் விளையாட்டு நடைபெற்றது.

அதில் பலரும் ஷிவானியை டாகெட் செய்தது போன்றே இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-ம் நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஷிவானிக்கு நீங்கள் எப்போதும் உள்ளது போலவே இருங்கள் என்று கூறுவதும், ஆரி நீங்கள் சமூக வலைத்தளங்களில் தினம் ஒரு வீடியோ போட்டு வந்தீர்களே, அது எதற்காக என்று கேள்வி கேட்பது போல ப்ரோமோ முடிகிறது.

இதை வைத்து பார்க்கும் போது பிக்பாஸ் வீடு ஷிவானியை சீண்டி, சூடு பிடிக்கும் போல உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version