டிவி

Bigg Boss Tamil: சூப்பர்.. இந்த வாரம் டபுள் எவிக்ஷன்! இவங்க ரெண்டு பேரும் தான் வெளியே போறாங்க!

Published

on

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் இரண்டு பேர் வெளியேறுகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை மேல் பிரச்சனை தான் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக குரூப்பிசத்திற்கு பஞ்சமே இல்லை.  ரியோ அர்ச்சனா கேங்கில் அனைவரும் தன்னை டார்கெட் செய்வதாக அனிதா குற்றம் சாட்டினார். இது பிக்பாஸ் வீட்டை மேலும் பரபரப்பாக்கியது.

இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் இருப்பதாகவும், அதில் ஒருவரை இன்றே வெளியேற்றுவதாகவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளிவந்த ப்ரோமோவில், ‘எவ்வளவு சொல்லியும் கேக்க மாட்டுக்காங்க. ஒன்னா இருந்தா ஒன்னா வெளியே போக வேண்டியது தான். நீங்க உங்க வேலையை காமிச்சிட்டேங்க. நான் என் வேலையை காமிக்கிறேன்’ என கமல்ஹாசன் ப்ரோமோவில் கலக்கலாக பேசியுள்ளார்.

எனவே, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் ஒருவர் இன்றும், இன்னொருவர் நாளையும் இருக்கலாம். ஆஜீத் கூறியபடி, அது ரியோவின் நெருக்கமான நண்பர் இன்று வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version