சினிமா

பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் போட்டியாளர்கள்: நோட்டீஸ் அனுப்பியது டொபாக்கோ மானிட்டர் அமைப்பு!

Published

on

நடப்பு பிக்பாஸ் சீசனில் பல்வேறு சர்ச்சைகள் உருவாகி வருகிறது. அதில் தற்போது போட்டியாளர்கள் புகைப்படிப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டொபாக்கோ மானிட்டர் என்ற அமைப்பு இது தொடர்பாக கமல் ஹாசன் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த சீசன்களில் மறைவாக இருந்த ஸ்மோக்கிங்க் ரூம் இந்தமுறை போட்டியாளர்கள் பயன்படுத்தும் இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மோக்கிங் ரூம், புகையை உறிஞ்சி வெளியேற்றும் சக்‌ஷன் பிராசஸில் வடிவமைக்கப்பட்டு சிறிய அளவிலான ஒன்றாக உள்ளது. இதில் ஒருவருக்கு மேல் அங்கு இருக்கக்கூடாது என்ற பிக்பாஸ் விதி உள்ளது.

ஆனால், பெரும்பாலும் அந்த விதி யாரும் பின்பற்றப்படுவதில்லை. நேற்று முன்தினம் சாக்‌ஷி, அபிராமி, ஷெரின் ஆகியோர் ஒன்றாக ஸ்மோக்கிங் ரூமில் இருந்ததால் தண்டனை வழங்கினார் பிக்பாஸ். இந்நிலையில் இந்த விவகாரத்தை தற்போது டொபாக்கோ மானிட்ட அமைப்பு கையிலெடுத்துள்ளது.

ஒருவர் வெளியிடும் புகை, அவருக்கே ஆபத்தானது எனும்போது உடன் இருக்கும் மற்றவர்களுக்கு அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டும். லட்சக்கணக்கான மக்கள் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில், புகைப்பிடிப்பதை மிகவும் இலகுவான ஒன்றாகக் காட்டுவதும், அதைப் பார்ப்பவர்கள் மத்தியில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? என்ற கேள்விகளுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் விளக்கம் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது டொபாக்கோ மானிட்டர் அமைப்பு.

Trending

Exit mobile version