டிவி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் அந்த நபர் யார்?

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலிருந்து, இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்கள் முடிந்து 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் 5 சீசன்களில் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு வாரமும் பரபரப்பு குறையாதபடி பிக்பாஸ் சீசன் 6 உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6-ல் முதல் வாரத்தில் சாந்தி மாஸ்டர் வெளியேறினார். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் மைனா நந்தினி போட்டியாளராக அறிமுகமாகினார். பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் வாய்ப்பு அதிகம் இருந்து ஜிபி முத்து, தனது மகன் மீது இருந்த அதீத பாசம் காரணமாகத் தாமாக முன்வந்து வெளியேறினார்.

பின்னர் நடைபெற்ற எவிக்‌ஷன் நிகழ்வில் அசல் கோளாரு, அவர் செய்த கோளாறு காரணங்களுக்காக வெளியேறினார். அதற்கு அடுத்த வார எவிக்‌ஷனில் ஷெரிலினா குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார்.

இந்த வாரம் எவிக்‌ஷனில் விக்ரமன், அசீம், ஆயீஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி, ஏடிகே உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள்.

அதில் மிகவும் சைலண்டாக உள்ள ராம் எவிக்‌ஷனில் வெளியேறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்ற வாரம் ஷெர்லினா வெளியேறும் போது, நான் வெளியே போக வேண்டும் என்று கதறி அழுத ஆயிஷாவை ரசிகர்கள் காப்பாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

ராமிற்கு அடுத்தபடியாக மகேஸ்வரி குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version