டிவி

பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் வெளியேறுவது இந்த நடிகையின் அண்ணனா?

Published

on

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் பரபரப்பு குறையாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதுவரையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜி.பி.முத்து, டேன்ஸ் மாஸ்டர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஷ்வரி உள்ளிட்டவர்கள் வெளியேறி உள்ளார்கள்.

இந்த வாரம் நாமினேஷனில் அசீன், தனலட்சுமி, அமிதவாணன், ராம், மணிகண்டன், கதிரவன் உள்ளிட்டவர்கள் உள்ளார்கள்.

இதில் ராபர்ட் மாஸ்டருக்கும் மணிகண்டனுக்கும் குறைவான வாக்குகள் உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற நீதிமன்றம் டாஸ்கில் மணிகண்டன் அதிக பங்களிப்பை வழங்கி இருந்தார். ஆனால் மணிகண்டன் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறபப்டுகிறது. மணிகண்டன் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல் ஹாசனுக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவனமையில் சிகிச்சை பெற்றும் வரும் நிலையில், இந்த வாரம் கமல் தொகுத்து வழங்குவாரா இல்லை ரம்யா கிருஷ்ணன், சிம்பு இருவரில் ஒருவர் வருவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் அமுதவாணன் ஜனனி குழிக்கும் போது எட்டி பார்ப்பது போல ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதை பிக்பாஸும் எச்சரித்தும் உள்ளார். இது உண்மை என்றால் அமுதவாணன் ரெட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version