டிவி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Published

on

பிக்பாஸ் வீட்டிலிருந்து சென்ற வார நாமினேஷனில் தேர்வு செய்யப்பட்டு, இந்த வாரம் வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் மீண்டும் சினிமாவில் பிஸி ஆகிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறிய ராபர்ட் மாஸ்டர், வெளியில் வந்த உடன் தன்னுடன் பிக் பாஸ்ட் போட்டியில் பங்கேற்ற அசல் கோலாரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இவர்களது சந்திப்பு குறித்த புகைப்படங்கள் அண்மையில் வெளியானது.

இந்நிலையில், ராபர்ட் மாஸ்டர் இப்போது அவர் நடித்துள்ள புதர் என்ற படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப்படத்தின் போஸ்டர்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

2020-ம் ஆண்டுக்கு பிறகு ராபர்ட் மாஸ்டருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் வராத நிலையில், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்குப் பிறகு பலர் அவரை தொடர்புகொண்டு பட வாய்ப்புகள் வழங்கு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version