தமிழ்நாடு

அரசியலில் பிக் பாஸ் நித்யா: தமிழக தலைவராக நியமனம்!

Published

on

காமெடி நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் நித்யா தற்போது அரசியலில் குதித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தேசிய பெண்கள் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட நித்யா அந்த கட்சியின் தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதே தங்களது குறிக்கோள் என இந்த கட்சியை துவங்கிய சமூக ஆர்வலர் ஸ்வேதா ஷெட்டி கூறுகிறார். இந்நிலையில் இந்த பெண்கள் கட்சி சென்னையில் நேற்று உதயமானது. இதன் தமிழக தலைவராக நித்யா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தங்கள் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 283 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் அதில் தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடமுடிவு செய்திருப்பதாக கூறியுள்ள நித்யா தானும் கண்டிப்பாக ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version