விமர்சனம்

பிக் பாஸ் கவினின் டாடா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Published

on

இன்றைய கால இளைஞர்கள் திருமணத்திற்கு முன்பே தப்பு செய்து குழந்தை உண்டானதும் கஷ்டப்படும் கதையை மிகவும் எதார்த்தமாகவும் காமெடி கலந்தும் இயக்குநர் கணேஷ் கே. பாபு பிக் பாஸ் கவின் மற்றும் பீஸ்ட் அபர்ணா தாஸை வைத்து சொல்லியிருக்கும் படம் தான் இந்த டாடா.

டாடி என்பதன் செல்லப் பெயரே டாடா. காதலிக்கும் பையனுக்காக வீட்டை விட்டு வெளியே வரும் சிந்து ஊதாரித்தனமாக சுற்றும் மணிகண்டன் கவின் குழந்தையை கலைக்க சொன்னதுமே இதை தவிர வேற ஏதாவது சொல் செய்யுறேன் என்கிற இடத்தில் தாய்மை மிளிர்கிறது.

#image_title

ஆனால், குழந்தை பெற்றதும் தந்தையின் தலையிலேயே அந்த குழந்தையை கட்டி விட்டு செல்லும் இடத்தில் இளம் பெண்களின் இயலாமையை இயக்குநர் வெளிப்படுத்துகிறார்.

அப்பா, அம்மா வளர்க்க வீட்டில் ஜாலியாக சரக்கடித்து விட்டு வளரும் பொறுப்பில்லாத இளைஞராக நடித்துள்ள கவினை அவரது குழந்தை எப்படி மாற்றுகிறார் என்பதே இந்த படத்தின் கதை.

#image_title

குழந்தையை வளர்ப்பது ஒன்றும் சாதாரண விஷயமில்லை என்கிற விஷயங்களையும் இளைஞர்கள் காதல் செய்வதும் இளம் வயதிலேயே பெற்றோர்கள் ஆனால், என்ன என்ன சிக்கல் வரும் என்பதை எல்லாம் ப்ரீச்சியாக சொல்லாமல் காமெடி நெடி தூவி அதை ரசிக்கும் படி ஸ்க்ரீன் பிளே அமைத்த இடத்தில் இயக்குநர் ஸ்கோர் செய்திருக்கிறார்.

சின்ன பட்ஜெட் படம் என்பதே தெரியாத அளவுக்கு படத்தின் ஒளிப்பதிவாளர் மெனக்கெட்டு ரிச் லுக்கில் படத்தை கொடுத்து பாராட்டுக்களை அள்ள இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைகிறது.

#image_title

2 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக்கூடிய டாடா படத்தில் எந்தவொரு சீனும் தேவையில்லாத லேகும் இல்லாமல் அடுத்தடுத்த காட்சிகள் என்னவாக இருக்கும் கதை எப்படி சென்று எங்கே முடியும் என அனைத்துமே தெரிந்தாலும், திரையில் பார்க்கும் போது அதில், காட்சிகளின் வழியே புதுமையை புகுத்தி இயக்குநர் ஒரு தரமான படத்தை இந்த வாரம் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

இந்த ஆண்டு வெளியானதிலேயே டாடா படம் தான் இதுவரை விமர்சன ரீதியாக பாராட்டுக்களை அள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா ரேட்டிங்: 3.75/5.

seithichurul

Trending

Exit mobile version