சினிமா செய்திகள்
“களத்தில் சந்திப்போம்” படத்துக்கு பிக் பாஸ் பிரபலங்கள் கொடுத்த ரிவ்யூ!
![Kalatthil Santhipom - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/Kalatthil-Santhipom.jpg)
ஜீவா – அருள்நிதி இணைந்து நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதற்கான ஸ்பெஷல் ஷோ நேற்றுத் திரையிடப்பட்டது. அதை பிக் பாஸ் பிரபலங்கள் பார்த்துவிட்டு தங்களது ரிவ்யூவைக் கொடுத்துள்ளனர்.
ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். பிரியா பவானி சங்கர் மற்றும் மஞ்சுமா மோகன் ஆகியோர் கதாநாயகிகளாக இப்படித்தில் நடித்துள்ளனர். என்.ராஜசேகர் இயக்கியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு காமெடி விருந்தாக திரைக்கு வந்துள்ளது.
What bigg boss 4 contestants had to say about #KalathilSandhippom #KalathilSandhippom NOW IN THEATRES. pic.twitter.com/CxkkRIPwH8
— S Abishek Raaja (@cinemapayyan) February 5, 2021
இந்தப் படத்துக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்துள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்தி, ‘படத்தைப் பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சு. டயலாக்லாம் செமயா இருக்கு’ என்றுள்ளார்.
அதேபோல கேபி, ‘நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வந்தேன். படம் நல்ல ஃபன்னா இருக்கு’ என்றார். ரம்யா பாண்டியன், ‘ஜீவா – அருள்நிதி காம்போ நல்லா வொர்க் அவுட் ஆகியிருக்கு’ என்றுள்ளார்.