தமிழ்நாடு

முன்னாள் பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்களைக் குறிவைக்கும் பாஜக!

Published

on

2021-ம் தேர்தலுக்கு முன்பு கட்சியைப் பலப்படுத்தும் விதமாக, பாஜக திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களைக் கட்சியில் இணைத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக இரண்டு நாட்களுக்கு பாஜகவில் இணைந்துள்ளார், சென்ற ஆண்டு பிக்பாஸில் பங்கேற்ற மோகன் வைத்தியா.

பாஜகவில் இணைந்த மோகன் வைத்தியா, “வரும் தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும். பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரிய மாற்றங்கள் வரும். ஏமாற்றங்கள் வராது. பல நல்ல விஷயங்கள் மக்களுக்குக் கிடைக்கும். நான் விரைவில் மோடி ஜி-ஐ சந்திப்பேன். இனிமேல் தான் என் ஆட்டத்தைப் பார்க்கப் போகிறீர்கள். தாமரை சத்தியமாகத் தமிழகத்தில் மலரும்.

பல நல்ல விஷயங்களைச் செய்வதற்காக பாஜவில் இணைந்துள்ளேன். இந்தக் கட்சியில் எனக்குள்ள முக்கியத்துவம் கொடுக்கப்படும். கலைஞர்களான நாங்கள் மக்கலிடம் நல்ல விஷயங்களை எடுத்துச் செல்வோம். மக்களுக்கு எங்கள் மீது அன்பும், அபிமானமும் உள்ளது. அவர்களுக்கு பிடித்தவர்களாக நாங்கள் இருக்கிறோம். எனக்குக் காவி நிறம் பிடிக்கும். அனைத்து பண்டிகைகளுக்கு நான் காவி நிற உடைகளை வாங்கி அணிவேன். மக்களுக்காகச் சேவை சேவை வேண்டும். விவசாயம் சார்ந்த முன்னெடுப்புகளைத் தொடங்குவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மோகன் வைத்தியாவுக்கு பிக்பாஸ் வீட்டில் இவருடன் போட்டியிட்டவர்களை பாஜகவில் இணைக்கும் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவரைத் தொடர்ந்து வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைய உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version