டிவி

‘முக்குலத்தோர் ஓட்டு வேறு எக்குலத்துக்கும் கிடையாது!’- ‘பிக்பாஸ்’ பாலாவுக்கு இப்படி ஒரு ஆதரவா?

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் கடைசி வாரம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் நான்காவது சீசனின் டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்துவிடும்.

இப்போதைக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்கள் ஆரி, பாலா, ரம்யா பாண்டியன், ரியோ, கேபி மற்றும் சோம். இந்த 6 பேரில் ஆரி மற்றும் பாலாவுக்கு இடையில் டைட்டிலை வெல்வதில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்கும் மக்கள் ஆதரவும் அதிகம் உள்ளது.

இந்நிலையில், பாலாவுக்கு வித்தியாசமான முறையில் சமூக வலைதளங்களில் ஆதரவு ஒன்று கிளம்பியுள்ளது. அது குறித்தான படம் தற்போது வைரல் ரகம். நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படும் அந்த போஸ்டரில், பாலா மீசையை முறுக்கும்படியான படம் உள்ளது. மேலும், ‘முக்குலத்தோர் ஓட்டு வேறு எக்குலத்துக்கும் கிடையாது’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. கூடுதலாக, பாலாஜியின் பெயர் ‘மாவீரர் பாலாஜி முருகதாஸ்’ என்றும் கொட்டை எழுத்துகளில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் உண்மைத் தன்மை குறித்து தெரிந்து கொள்ள முடியவில்லை.

seithichurul

Trending

Exit mobile version