சினிமா செய்திகள்

பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் புதுப்பட போஸ்டர் ரிலீஸ்!

Published

on

பிக்பாஸ் 2வது சீசனில் சர்வாதிகாரியாக வந்து அனைவரையும் வச்சு செஞ்ச ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான அலெக்கா படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

போஸ்டரில் போர்வைக்குள் நான்கு கால்கள் இருப்பது மட்டுமே தெரிகின்றது. இது எங்களின் காதல் அல்ல, உங்களின் காதல் என ஐஸ்வர்யா தத்தா தெரிவித்துள்ளார்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நகுலுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸில் டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரித்விகா வின்னர் என அறிவிக்கப்பட்டு, ஐஸ்வர்யா ரன்னர் அப் ஆனார்.

நடிகர் ஆரி இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நடிக்கிறார். இயக்குநர் ராஜ மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள காதல் படமான அலெக்காவுக்கு சத்யா இசையமைக்கிறார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version