சினிமா செய்திகள்

பிக்பாஸ் ஆரி-யின் அடுத்த படம்… ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

Published

on

பிக்பாஸ் ஆரி உடன் மற்றொரு பிக்பாஸ் பிரபலம் இணைந்து நடித்துள்ள அலேகா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிக்பாஸ் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா மற்றும் இன்றைய பிக்பாஸ் நட்சத்திரம் ஆரி ஆகிய இருவரும் நடித்துள்ள படம் ‘அலேகா’. இத்திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கி உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஐஸ்வர்யா தத்தா நடித்த முதல் படம் அலேகா தான். அலேகா படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் புத்தாண்டுக்கு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

சமீபத்தில் தான் பிக்பாஸ் வீட்டிலேயே நடிகர் ஆரி நடிப்பில் தமிழின் முதல் இலுமினாட்டி படமான ‘பகவான்’ திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பெற்றது. தற்போது ஆரியின் பிக்பாஸ் புகழால் அலேகா போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version