சினிமா செய்திகள்

Bigg Boss 4: எவிக்ட் ஆன பின் ‘ஜித்தன்’ ரமேஷ் வெளியிட்ட முதல் வீடியோ

Published

on

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் நடிகர் ஜித்தன் ரமேஷ் முதன்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியுடன் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

ரமேஷ் வீடியோவில் கூறியதாவது:-

‘அனைவருக்கும் வணக்கம். நான்தான் உங்கள் ஜித்தன் ரமேஷ் பேசுறேன். பிக் பாஸ் வீட்டில எழுபது நாள் இருந்தேன். உங்களோட ஆதரவு இல்லாம இவ்வளவு நாள் உள்ள இருந்திருக்க முடியாது. எனத்து தொடர்ச்சியா சப்போர்ட் பண்ணிட்டு வந்த உங்க எல்லாருக்கும் ரொம்ப தாங்க்ஸ். இனியும் உங்க சப்போர்ட் எனக்குத் தேவப்படுது. அடுத்து ரிலீஸ் ஆக போற என்னுடைய சினிமா படங்களுக்கு நீங்க எல்லாரும் தொடர்ந்து சப்போர்ட் கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன். எல்லாருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version