டிவி

‘நான் காயப்பட்டுட்டேன்!’- பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் நிஷாவின் முதல் வீடியோ

Published

on

பிக் பாஸ் நான்காவது சீசனிலிருந்து நேற்று வெளியேறினார் அறந்தாங்கி நிஷா. இந்நிலையில் அவர், பிக் பாஸிலிருந்து வந்த பின்னர், அவரது குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். இது குறித்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பட்டிமன்றப் பேச்சாளராக தனது கலைப் பயணத்தை ஆரம்பித்த நிஷா, விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ மூலம் பிரபலமடைந்தார். தொடர்ந்து விஜய் டிவியின் பல ஷோக்களில் ஸோஸ்டாக வந்தார். அவரும் இந்த முறை பிக் பாஸ் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார். யாரையும் அதிகம் காயப்படுத்தாமல் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வந்த நிஷா, நேற்று எவிக்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர், ‘உறவுகளுக்கும் வணக்கம். நான் யாரையும் காயப்படுத்த கூடாது என்று நினைத்தேன். இன்று நான் காயபட்டு விட்டேன். தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version