டிவி

‘ஹோம்கம்மிங்!’- பிக் பாஸிலிருந்து வந்த அர்ச்சனாவுக்கு கிடைத்த வரவேற்ப பாருங்க

Published

on

பிக் பாஸிலிருந்து எவிக்ட் செய்யப்பட்ட பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனாவுக்கு, அவரது குடும்பம் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பைக் கொடுத்துள்ளனர். இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர், அவரது மகள் சாரா, தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவே எவிக்‌ஷனுக்குப் பின்னர் வெளிவரும் அர்ச்சனாவின் முதல் புகைப்படம் மற்றும் சோஷியல் மீடியா போஸ்ட்.

‘என்னுடைய பாஸ் திரும்ப வந்துவிட்டார். எனக்கு இது மிகவும் பிடித்துள்ளது. கடவுள் இருக்கான் குமாரு’ என்று பதிவிட்டு, தன் தாயுடன் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் சாரா. இதற்கு லைக்ஸ்களும் கமென்ட்ஸ்களும் அள்ளுகின்றன.

இந்நிலையில் அர்ச்சனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வீட்டுக்கு வந்தவுடன் எப்படி வரவேற்பு கொடுக்கப்பட்டது என்பது குறித்தான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ இதோ:

 

Trending

Exit mobile version