டிவி

ஃபர்ஸ்ட் ஓப்பன் நாமினேஷன்… ரியோ – அனிதா இடையில் வெடித்த மோதல்… இன்றைய Bigg Boss பரபர!

Published

on

பிக் பாஸ் சீசன் 4 பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் எப்போதும் இல்லாத வகையில் இரண்டு பேர் எவிக்ட் செய்யப்பட்டனர். இந்த சீசன் முடிய இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே பாக்கியுள்ளன.

இந்நிலையில் இந்த சீசனில் முதன்முறையாக இன்று ஓப்பன் நாமிநேஷன் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் போட்டியாளர்கள் அனைவரும், பிக் பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறலாம் என்பதை நேரடியாக எல்லோர் முன்னிலையிலும் தெரிவிக்கலாம். மேலும் எதற்காக ஒருவரை மற்றொருவர் நாமினேட் செய்கிறார் என்கிற காரணத்தையும் எல்லோரிடமும் சொல்ல வேண்டும். இந்த காரணத்தினால் இன்றைய பிக் பாஸில் பல மோதல்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அந்த வகையில் ரியோ, அனிதா குறித்து ஓப்பன் நாமினேஷன் போது சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான அனிதா, ‘எதுவா இருந்தாலும் என் மூஞ்சு முன்னாடியே சொல்லுங்க. உங்களுக்கு தைரியமில்லையா?’ எனக் கேள்வி கேட்டு உசுப்பேற்றுகிறார். அதற்கு உச்சகட்ட கோபமடைந்த ரியோ, ‘இப்டிலாம் பேசற வேல வச்சிக்காதீங்க. நல்லா இருக்காது’ என எச்சரிக்கிறார். அடுத்த என்ன நடக்கும் என்பது குறித்து முழு ஷோவைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

Trending

Exit mobile version