சினிமா செய்திகள்

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நாயகன் ஆகும் ‘பிக்பாஸ்’ தர்ஷன்!

Published

on

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து வழங்க உள்ள படம் ஒன்றில் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 புகழ் ‘தர்ஷன்’ நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 மூலம் புகழ் பெற்றவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் முதலில் மாடலிங் துறையில் தொடங்கி தமிழகத்தில் பிக்பாஸ் வாய்ப்புப் பெற்று புகழ் பெற்றார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போதே நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் ஒரு படத்தில் நாயகன் ஆகும் வாய்ப்போடு தான் வந்தார்.

அதன் பின்னர் கொரோனா காரணமாக இன்னும் எந்தப் பட அறிவிப்புகளும் வெளியாகவில்லை. தற்போது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நாயகன் ஆக ஒப்பந்தம் ஆகியுள்ளார். மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தை ரீமேக் செய்து தமிழில் வெளியிட ரவிக்குமார் உரிமம் பெற்றுள்ளார்.

இதையடுத்து நாயகனாக தர்ஷனும் அவருக்கு அப்பா கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமாரும் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாக இருந்த சரவணன் மற்றும் சபரி ஆகிய இருவரும் இயக்க உள்ளனர். முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் யோகி பாபு நடிக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version