டிவி

பிக்பாஸ் பாலாஜி-க்காக ஒரு பாடல்… சொந்தமாக எழுதி, பாடும் சுசித்ரா..!

நிகழ்ச்சியில் தொடங்கிய அதே நட்புடன் வெளியேறிய பின்னரும் பாலாஜிக்கு ஆதரவாகப் பல இன்ஸ்டாகிராம் பதிவுகளை சுசித்ரா வெளியிட்டு வந்தார்.

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது விளையாடி வரும் பாலாஜி-க்காக பாடகி சுசித்ரா சொந்தமாக ஒரு பாடல் எழுதி டெடிகேட் செய்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது விளையாடி வரும் பாலாஜியின் உடன் சக போட்டியாளராக விளையாடியவரி பாடகி சுசித்ரா. இவர் பல வாரங்களுக்கு முன்னரே சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார். நிகழ்ச்சியின் போதே தனக்கு மிகவும் பிடித்து போட்டியாளர் பாலாஜிதான் என சுசித்ரா தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் தொடங்கிய அதே நட்புடன் வெளியேறிய பின்னரும் பாலாஜிக்கு ஆதரவாகப் பல இன்ஸ்டாகிராம் பதிவுகளை சுசித்ரா வெளியிட்டு வந்தார். தற்போது பாலாஜி-க்காக ‘பாலாஜி பாடல்’ என்ற புது பாடலை பாடி வெளியிட்டுள்ளார். அவரது பதிவில் ‘பிக்பாஸ் ஒரிஜினல்ஸ்’ என்றும் ஹேஷ்டேக் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version