சினிமா செய்திகள்
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியே இன்னும் முடியவில்லை… சம்யுக்தாவுக்குக் குவியும் பட வாய்ப்புகள்!
பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகயும் மாடலுமான சம்யுக்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியே முடியாத சூழலில் அதற்குள் ஏகப்பட்ட படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார் சம்யுக்தா.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் தனுஷ ராசி நேயர்களே என்ற படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார் சம்யுக்தா. பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரும் முன்னரே பல பட வாய்ப்புகளைக் கைப்பற்றி வருகிறார். தாய், பெண் தொழில் அதிபர், மாடலிங், நடிப்பு, நடனம் எனப் பல தளங்களில் தற்போது சம்யுக்தா கலக்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த உடனே நடிகர் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் கமிட் ஆனார். அடுத்ததாக நடிகர் கெளதம் கார்த்திக் படம் ஒன்றிலும் அடுத்ததாக பெயர் அறிவிக்கப்படாத மற்றொரு படத்திலும் கமிட் ஆகி உள்ளார்.
View this post on Instagram