டிவி

விஜய் டிவி சீரியலில் ஜோடி ஆகிறார்களா பிக் பாஸ் சிவானி – பாலாஜி!

Published

on

விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சீரியலில் பிக்பாஸ் புகழ் சிவானி மற்றும் பாலாஜி ஆகியோர் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் காதல் ஜோடிகளாக பிரபலம் ஆனவர்கள் சிவானி மற்றும் பாலாஜி. இந்த இருவரின் கெமிஸ்ட்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே ஒர்கவுட் ஆனதால் விஜய் டிவி-யில் தொடங்க உள்ள புதிய சீரியல் ஒன்றில் இவர்கள் இருவரையும் ஜோடி சேர்க்க விஜய் டிவி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

ஆனால், சிவானி உடன் ஏற்கெனவே பகல் நிலவு சீரியலில் ஜோடி சேர்ந்த அசீம் உடன் மீண்டும் புதிய சீரியலில் நடிக்க வைக்கலாம் என்ற முடிவிலும் நிர்வாகம் இருப்பதாகவும் ஒரு செய்தி உலா வருகிறது. அசீம்- சிவானி காதல் பிரச்னையாலேயே அசீம்-க்கு தற்போது விவாகரத்து ஆகியுள்ளதாகக் கூறப்படும் வேளையில் மீண்டும் அசீம்- சிவானி ஜோடி சேருவது டி.ஆர்.பி-க்கு உதவுமாம்.

பிக்பாஸ் பாலாஜி-க்கு சில பட வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால், சிவானிக்கு எந்த பட வாய்ப்பும் இதுவரையில் வரவில்லையாம். அதனாலே விஜய் டிவி சீரியலுக்கு ஒப்புக் கொண்டுள்ளாராம் சிவானி.

seithichurul

Trending

Exit mobile version