சினிமா செய்திகள்

‘பவன் கல்யாணுக்கு நான்காவது மனைவியாக ஆசை’- பிக்பாஸ் நடிகையின் வைரல் கோரிக்கை!

Published

on

நடிகர் பவன் கல்யாணுக்கு நான்காவது மனைவி ஆக ஆசை என பிக்பாஸ் பிரபல நடிகை ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ள செய்தி வைரல் ஆகி வருகிறது.

நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு திரைப்பட உலகில் ஒரு மாஸ் ஹீரோ ஆக உள்ளவர். அரசியலிலும் இருக்கிறார். இவருக்கு இதுவரையில் இரண்டு முறை விவாகரத்து ஆகி தற்போது மூன்றாவது மனைவி உடன் வாழ்ந்து வருகிறார். இவரது மூன்றாவது மனைவி ஒரு ரஷ்ய நடிகை ஆவார்.

பவனின் தீவிர ரசிகை ஆக தன்னை எப்போதும் காட்டி வருபவர் நடிகை அஷு ரெட்டி. இவர் பிக்பாஸ் 3 தெலுங்கு நிகழ்ச்சியின் மூலம் புகழ் அடைந்தவர். இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரல் நடிகை ஆக இருப்பவர். சில காலத்துக்கு முன்னர் பவன் கல்யாணின் பெயரை தனது கையில் பச்சை குத்தி வைரல் ஆனார். இந்நிலையில் தற்போது பவன் கல்யாண் ஒரு டீ விருந்துக்காக அஷு ரெட்டியை அழைத்திருந்தார். அந்தப் புகைப்படமும் வைரல் ஆக ரசிகர்கள் பவன் கல்யாணை திருமணம் செய்து கொள்ள சம்மதமா எனக் கேட்டனர்.

அதற்கு அஷு ரெட்டி பவன் கல்யாணுக்கு நான்காவது மனைவி ஆக ஆசை என பொது தளத்திலேயே தெரிவித்தார். இதுவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version