டிவி

பிக்பாஸ் பாலாஜி-யின் தந்தை திடீர் மரணம்!- சக பிக்பாஸ் போட்டியாளர்கள் இரங்கல்

Published

on

பிக்பாஸ் பாலாஜியின் தந்தை முருகதாஸ் இன்று திடீரென மரணம் அடைந்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் பாலாஜி முருகதாஸ். நிகழ்ச்சியின் போதே தனது தாய்- தந்தை தன்னை ஒழுங்காக வளர்க்கவில்லை என தனது சிறு வயது கஷ்டங்களை பகிர்ந்து கொண்டார். பாலாஜி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆக போட்டியை நிறைவு செய்து வீடு திரும்பினார்.

இந்த சூழலில் இன்று திடீரென பாலாஜியின் அப்பா முருகதாஸ் உடல் நலக் குறைவின் காரணமாக மரணம் அடைந்துள்ளார். தந்தையின் மரணம் குறித்து பாலாஜியின் அண்ணன் தனது சமுக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இதுவும் கடந்து போகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். பாலாஜியின் அம்மாவும் கடந்த 2019-ம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலாஜியின் தந்தை மரணத்துக்கு சக பிக்பாஸ் போட்டியாளர்களான ஆரி, சனம் ஷெட்டி ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version