டிவி

பிக்பாஸ்-4ல் டெலிட் ஆன சமுக அக்கறை விவாதங்கள்… விவரிக்கும் அனிதா சம்பத்

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் பல முக்கிய சமுக அக்கறை நிறைந்த விவாதங்கள் இடம்பெற்ற காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட வில்லை என அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் 84-வது நாள் அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த சில தினங்களிலேயே அனிதா சம்பத் அப்பா மரணம் அடைந்தார். இதனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் கொடுப்பது போல் இதுவரையில் எந்தவொரு நேர்காணலையும் அனிதா தரவில்லை. சில விளக்கங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

பல முன்னெடுப்புகள் செய்ய உள்ளதாகவும் விளக்கங்கள் கொடுக்கப்படும் என்றும் ஆனால் அதற்கு சில கால அவகாசத்தை ரசிகர்கள் வழங்க வேண்டும் என்றும் அனிதா சம்பத் தெரிவித்துள்ளார். மேலும் தான் பிக்பாஸ் வீட்டில் தலைவராக இருந்த போது தினமும் காலையில் சமுக அக்கறை நிறைந்த தலைப்புகளை எடுத்து தானும் பேசி ஹவுஸ்மேட்சையும் பேச வைத்ததாகத் தெரிவித்துள்ளார். அந்தக் காட்சிகள் எல்லாமே கட் செய்யப்பட்டு எதுவுமே ஒளிபரப்பு செய்யப்பட வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், திருநங்கைகள் மேம்பாட்டுக்காக ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும் அதை செயல்படுத்த தன்னார்வலர்கள் வேண்டும் என்றும் ரசிகர்களிடம் அனிதா சம்பத் கோரிக்கை வைத்துள்ளார்.

Trending

Exit mobile version