சினிமா செய்திகள்

இலுமினாட்டி ஆக ‘பிக்பாஸ்’ ஆரி கலக்குவாரா..?- விரைவில் ‘பகவான்’..!

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது கடுமையான போட்டியாளராக ஆரி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நெடுஞ்சாலை படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகர் ஆரி, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கலக்கி வருகிறார். இவரது அடுத்த படமான ‘பகவான்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர் நேற்று பிக்பாஸ் வீட்டிலேயே அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

தமிழ் சினிமாவின் முதல் இலுமினாட்டி திரைப்படமாக ‘பகவான்’ இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்தை காலிங்கன் எழுதி, இயக்குகிறார். 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஜனவரி மாதம் பிக்பாஸ் நிறைவடைந்த உடன் மீண்டும் இறுதிகட்டப் படப்பிடிப்பு ஆரி வந்தவுடன் தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version