டிவி

ரசிகரின் பிறந்தநாளுக்கு நடு இரவில் சர்ப்ரைஸ் கொடுத்த ’பிக்பாஸ்’ ஆரி..!

Published

on

நடிகர் ஆரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தததில் தொடர்ந்து பிஸியாகவே உலாவிக் கொண்டிருக்கிறார்.

105 நாட்கள் முழுவதுமாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்துவிட்டு 106-வது பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டிள் வின்னர் ஆக வெளியேறி உள்ளார் நடிகர் ஆரி. வெளியே வந்த அடுத்த நாளே ஒரு புதுப்படத்துக்கான பூஜையில் கலந்து கொண்டே அன்றே உடல் நலக் குறைவால் வீட்டில் முடங்கிவிட்டார். அடுத்து இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு உடனே ரசிகர்களைச் சந்திக்கக் கிளம்பி உள்ளார்.

இந்தச் செய்தி தற்போது ஆரி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகப் பரவி வருகிறது. ரசிகர்களுக்காக ஒதுக்கிய நேரம் போக தன்னுடைய தீவிர ரசிகர் ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாட நட்ட நடு இரவில் அவரது வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ஆரி. இது அந்த பிறந்தநாள் ரசிகருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரி ரசிகர்களையுமே குஷி படுத்தி உள்ளதாக ட்விட்டரில் வைரல் செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version