கிரிக்கெட்

பெங்களூர் அபார வெற்றி: வாக்குவாதத்தில் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக்!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடந்த 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றியைப் பெற்றது.

விராட் கோலி – நவீன் உல் ஹக்

நேற்றையப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்ற நிலையில் போட்டியின் போதும், போட்டிக்கு பின்னும் பரபரப்பான சூழ்நிலையே நிலவியது. லக்னோ பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 17வது ஓவரில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் மற்றும் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவர்கள் இருவரின் பிரச்சினையை சமரசம் செய்து வைத்தார்.

பின்னர், பெங்களூரு வெற்றிக்குப் பின் இரு அணி வீரர்களும் சந்தித்த நேரத்தில், நவீன் மற்றும் கோலி ஆகிய இருவரும் மீண்டும் மோதிக் கொண்டனர். இதனைக் கண்ட சக பெங்களூரு வீரர் மேக்ஸ்வெல் இரு வீரர்களையும் சமாதானம் செய்து வைத்தார்.

லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலும், பெங்களூரு அணி வீரர் விராட் கோலியும் சந்தித்து பேசினர். அப்போது, கோலியுடன் பேசமாறு நவீன் உல் ஹக்கை கேஎல் ராகுல் அழைத்தார். ஆனால், ராகுல் அழைப்பை ஏற்க மறுத்த நவீன், கோலியுடன் பேசாமலேயே சென்று விட்டார். நவீன் உல் ஹக் ஆப்கானிஸ்தானை சேர்ந்த வீரர் ஆவார். இந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version