தமிழ்நாடு

ரூ.2 கோடிக்கு சீர் வரிசை.. மாப்பிள்ளை வீட்டாரை மிரள வைத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!

Published

on

மதுரையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் ஆடு முதல் டிராக்டர் வரை என 2 கோடி ரூபாய்க்குச் சீர் வரிசை அளித்து, மாப்பிள்ளை வீட்டாரை மிரள வைத்துள்ளார் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.

மதுரை பதினெட்டாங்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழகரச்ன் – அரசி தம்பதியர். தமிழரசன் மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆவார், இவரது மகள் ஆர்த்திக்கும், மதுரை கொடி மங்கலம் பகுதியைச் சேர்ந்த வைத்தியநாதன், சித்ரா தம்பதியரின் மகன் வெற்றிவேலுக்கு நவம்பர் 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தின் முடிவில் மாப்பிள்ளை வீட்டாருக்கு, மணப்பெண் வீட்டிலிருந்து அளிக்கப்பட்ட சீர் வரிசை பொருட்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

திருமணம் மண்டபம் முழுவதும் பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, ஏர் கூலர், பேன், ஆட்டுக்குட்டி, டிராக்டர், இரண்டு சக்கர வாகனம், கார் என 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட பொருட்கள் அடுக்கி வைத்துள்ளனர்.

இந்த திருமணத்திற்குச் சென்றவர்கள், சீர்வரிசை பொருட்களை வீடியோவாக எடுத்துப் பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆடம்பரத் திருமணங்களுக்கு வரி விதிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இப்படி பெண் வீட்டார் சீர் வரிசை வழங்கினால், அதை பார்க்கும் பிறர் வீட்டிலும் இப்படி சீர் வரிசை கேட்டால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் என்ன செய்யும் என்று சர்ச்சையும் எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version