இந்தியா

ஏன்டா பெட்ரோல் விலையா ஏத்துறீங்க?! பெட்ரோல் பங்கில் அட்டகாசம் செய்த காட்டுப்பன்றி (வீடியோ)…

Published

on

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதோடு, டீசலின் விலையும் பெட்ரோல் விலையை நெருங்கிவிட்டது. பல மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90 தாண்டியது. தற்போது ரூ.100ஐ தாண்டிவிட்டது. இது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102 ஆக இருக்கிறது.இந்தியாவின் சில மாநிலங்களில் ரூ.110ஐ தாண்டி விட்டது.

இந்நிலையில், காட்டுப்பன்றி ஒன்று ஒரு பெட்ரோல் பங்கில் புகுந்து அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து ‘பெட்ரோல் விலை உயர்வை தட்டி கேட்ட காட்டு பன்றி’ என பதிவிட்டு வருகின்றனர்.

பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அந்த பன்றியை விரட்ட எவ்வளவு முயன்றும், அது மீண்டும் மீண்டும் அவர்களை தாக்க முயற்சி செய்யும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. ஆனால்,  இத எந்த மாநிலத்தில் நடைபெற்றது  என்பது தெரியவில்லை.

Trending

Exit mobile version