உலகம்

இனியும் காத்திருக்க முடியாது.. துப்பாக்கி சட்டத்தில் சீர்திருத்தங்கள் வேண்டும்- பைடன்

Published

on

வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தில் சீர்திருத்தங்கள் செய்ய காங்கிரஸ் சபைக்கு அதிபர் பைடன் அழைப்பு விடுத்துள்ளார். மற்றொரு பெரிய சம்பவத்திற்காக காத்திருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சாதாரணமாக அனைவரிடமும் துப்பாக்கி வைத்திருப்பது சர்வ சாதாரமானது. சாதாரண மக்களுக்கு கூட எளிதாக துப்பாக்கி கிடைத்துவிடும். இதன் விளைவு அப்பாவி மக்கள் பலருடைய உயிர் காரணமே இல்லாமல் போயுள்ளது. காரணமே இல்லாமல் பள்ளிகள் உட்பட பொது இடங்களுக்கு சென்று மக்கள் மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையானது.

கடந்த 2012 ஆம் ஆண்டில் கனெக்டிக்கட் மாநிலத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நடத்திய துப்பாக்கி சூடு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. பலரும் துப்பாக்கி சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அப்போதைய அதிபர் ஒபாமாவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது நிறைவேறவில்லை.

பின்னர் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் கடந்த 2018 பிப்ரவரி 15ம் தேதி ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெரும் துப்பாக்கி சூட்டில் 14 மாணவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். இதனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் கோரிக்கைகள் எழுந்தன. அந்த நிகழ்வின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிபர் பைடன் துப்பாக்கி கலாச்சாரத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மீண்டும் ஒரு துப்பாக்கிசூடு சம்பவத்திற்காக காத்திருக்க முடியாது, துப்பாக்கி வன்முறை என்ற எங்கள் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வந்து எங்கள் பள்ளிகளையும் சமூகங்களையும் பாதுகாப்பானதாக மாற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Also Read: கொரோனாவை விட ஆபத்தான எபொலா வைரஸ்: மீண்டும் பரவுவதால் பரபரப்பு!

நமது தெருக்களில் தெரிந்தே போர் ஆயுதங்களை வழங்கும் துப்பாக்கி உற்பத்தியாளர்களை அகற்ற காங்கிரஸ் முன்வர வேண்டும். ஃபுளோரிடாவில் நடைபெற்ற சம்பவத்தில் ஈடுபட்ட க்ரூஸ் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் அவரால் சட்டபூர்வமாக துப்பாக்கி முடிந்திருக்கிறது.

அமெரிக்கா முழுவதும் பல மக்கள் துப்பாக்கிசூடு சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஃபுளோரிடா சம்பவம் நாடு முழுவதும் சீற்றத்தைத் தூண்டியது மற்றும் துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற புதிய கோரிக்கைகளைத் தூண்டியது. ஆனால் அப்போது வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் செனட்டை கட்டுப்படுத்தியதால், பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினரால் அங்கீகரிக்கப்பட்ட சட்டம் வெற்றிபெறவில்லை என்றார்.

இதற்கிடையே ஜனநாயக கட்சியை சேர்ந்த சபாநாயகர் நான்சி, இதற்கான முயற்சியை மீண்டும் மேற்கொள்வோம் என கூறியுள்ளார். மேலும் நாங்கள் இது மற்றும் பிற உயிர்காக்கும் மசோதாக்களை தொடர்ந்து இயற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version