இந்தியா

பாஜகவில் இணைந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் சகோதரர்!

Published

on

சமீபத்தில் குன்னூரில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் செய்த இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்பட 13 பேர் விபத்துக்குள்ளாகி பலியான நிலையில் பிபின் ராவத் சகோதரர் தற்போது பாஜகவில் இணைந்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குன்னூரில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்பதும், இந்த விபத்தில் பயணம் செய்த பிபின் ராபாத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர்களும் பலியாகினர் என்பதும் தெரிந்ததே. இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது எனபதும் இது குறித்து நடந்த விசாரணையில் மோசமான வானிலையால் விபத்துக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மறைந்த பிபின் ராவத் அவர்களின் சகோதரர் விஜய ராவத் அவர்கள் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக பிரமுகர்கள் முன் அவர் தன்னை இணைத்துக்கொண்டு பாஜக உறுப்பினர் அட்டையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் இணைந்த பின்னர் விஜய ராவத் அவர்கள் கூறியபோது பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் புத்திசாலித்தனமான திட்டங்கள் தன்னைக் கவர்ந்ததாகவும் அதனால் தான் பாஜகவில் இணைந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய தந்தையும் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின் பாஜகவில் இணைந்தார் என்றும், அதனை அடுத்து தனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாஜகவில் இணைந்துள்ள விஜய் ராவத் அவர்களுக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version