பிற விளையாட்டுகள்

ஒலிம்பிக் வாள்வீச்சு: அடுத்த சுற்றில் தமிழகத்தின் பவானி தோல்வி!

Published

on

ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றில் தமிழகத்தின் வீராங்கனை பவானிதேவி அபாரமாக வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் தற்போது அடுத்த சுற்றில் அவர் தோல்வி அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் பவானிதேவி முதல் சுற்றில் 15-3 என்ற கணக்கில் தமிழக வீராங்கனை பவானிதேவி அபாரமாக வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவர் வாள்வீச்சு பிரிவில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்த நிலையில் ஒலிம்பிக் வாள்வீச்சு அடுத்த சுற்று சற்றுமுன் நடந்த நிலையில் இந்த சுற்றில் 15-7 என்ற புள்ளி கணக்கில் பவானி தேவியை பிரான்ஸ் வீராங்கனை மனோன் புரூனெட் வீழ்த்தினார். இதனால் பவானி தேவியின் ஒலிம்பி பதக்க கனவு தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா ஒரே ஒரு வெள்ளியை மட்டுமே பெற்று 25 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் சீனா 6 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் பெற்று முதலிடத்தில் உள்ளது என்பதும் ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனிவரும் போட்டிகளில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று இந்தியாவை பதக்கப் பட்டியலில் முன்னுக்கு கொண்டு வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version