தமிழ்நாடு

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்ப்பேன்: ரஜினியை வைத்துக்கொண்டே பாரதிராஜா அதிரடி!

Published

on

வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தான் போட்டியிடுவேன் என கூறி தனது அரசியல் வருகையை உறுதிபடுத்திய ரஜினிகாந்த் தனது பெயரில் மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி அரசியலுக்கு முன்னோட்டம் பார்த்து வருகிறார். தொடர்ந்து தனது அரசியலுக்கு அடித்தளம் அமைத்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ரஜினியை மேடையில் வைத்துக்கொண்டே அவர் அரசியலுக்கு வந்தால் அவரை நான் எதிர்ப்பேன் என பிரபல இயக்குநர் பாரதிராஜா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கலைஞானத்துக்கு பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்தார் இயக்குநர் பாரதிராஜா.

அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜய பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்த இந்த பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் ரஜினிகாந்த். இந்த விழாவுக்கு தலைமை தாங்கிய பாரதிராஜா பேசும்போது, ரஜினிக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும். அவர் அரசியலுக்கு வரும் முன்னர் அதனை நடத்திவிட வேண்டும். காரணம் அவர் அரசியலுக்கு வந்துவிட்டால் நாங்கள் எதிரெதிராக நிற்போம். அதனால் அவர் அரசியலுக்கு வரும் முன்னர் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று பேசினார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு எதிராக நிற்பேன் என அவரை வைத்துக்கொண்டே பாரதிராஜா பேசியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version