சினிமா செய்திகள்

பரத்தின் 50வது படத்தில் ஜோடியாகும் பிரபல நடிகை!

Published

on

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பரத் தற்போது 50வது படம் என்ற மைல்கல்லை எட்டிவிட்டார். அவர் நடிக்கும் 50வது படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் கலைப்புலி தாணு அவர்கள் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் பரத் ஜோடியாக பிரபல நடிகை வாணி போஜன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி உள்பட பலர் நடிக்கின்றனர். ஆர்பி பாலா என்ற அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரம் இதோ:

இயக்கம் – R.P.பாலா (இவர் இயக்கும் முதல் படம்)
தயாரிப்பு – R.P.பாலா, கௌசல்யா பாலா (R P பிலிம்ஸ்)
ஒளிப்பதிவு – P.G.முத்தையா
இசை – ரான்னி ரபேல் (மரைக்காயர்)
படத்தொகுப்பு – அஜய் மனோஜ்
கலை – சுரேஷ் கலம்பு
சவுண்ட் டிசைனர் – M.R.ராஜா கிருஷ்ணன்
நடனம் – பூபதி
எக்ஸிகியுடிவ் புரொடுயுசர் – ஆண்டொ L
புரொடக்‌ஷன் கண்ட்ரோலர் – S.சிவகுமார்
லைன் புரொடுயுசர் – ஆதவ்
காஸ்டுயூம் டிசைனர் – கஸ்தூரி இரானி
ஸ்டில்ஸ் – ரஞ்சித்

 

seithichurul

Trending

Exit mobile version