வைரல் செய்திகள்
பணியில் புதிதாக சேரும் ஊழியர்களுக்கு BMW, KTM பைக்குகள்- அசத்தும் பாரத் பே
![bharat pe - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/bharat-pe.jpg)
புதிதாகத் தங்கள் நிறுவனத்தில் பணிக்குச் சேரும் ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ, கேடிஎம் என விலை உயர்ந்த பைக்குகளை அளித்து அசத்துகிறது பாரத் பே நிறுவனம்.
பாரத் பே நிறுவனத்தின் சிஇஓ அஷ்னீர் க்ரோவர் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாரத் பே நிறுவனத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ, கேடிஎம், ஜாவா போன்ற விலை உயர்ந்த பைக்குகள், ஆப்பிள் கேட்ஜெட்டுகள், வரவேற்பு போனஸ் ஆகியவற்றை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக டெக் அணிக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட உள்ளன. ப்ராஜெக்ட் மேனேஜர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறதாம். விரைவில் மற்ற அணியினருக்கும் இந்த சலுகைகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என சிஇஓ க்ரோவர் தெரிவித்துள்ளார்.
முதலில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இந்த அத்தனை சலுகைகளும் வழங்கப்பட உள்ளது. மேலும், ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியை துபாயில் நடத்துவதற்கான ஸ்பான்சராக பாரத் பே நிறுவனம் இருப்பதால் அந்நிறுவனத்தின் டெக் அணியினர் அத்தனை கிரிக்கெட் போட்டிகளையும் இலவசமாகக் காணவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பைக், கேட்ஜெட்ஸ் ஆகியவற்றில் தங்களுக்குப் பிடித்த ப்ராண்டு எதுவோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.