வணிகம்

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்றாலும் பாரத் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு மானியம் தொடரும்!

Published

on

பாரத் பெட்ரோலியம் நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு அண்மையில் எடுத்தது.

அதை தொடர்ந்து, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் கேஸ் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மானியம் தொடர்ந்து கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

அதுகுறித்து விளக்கம் அளித்த பெட்ரோலியம் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டாலும், கேஸ் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அரசு நிறுவனங்களில் உள்ள தங்களது முதலீடுகளைக் குறைத்து, தனியாருக்கு விற்று வரும் மத்திய அரசின் முயற்சியில் பாரத் பெட்ரோலியம் பங்குகள் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் 28.50 கோடி கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 7.30 கோடி கேஸ் இணைப்புகள் பாரத் கேஸ் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version