சினிமா செய்திகள்

விமான நிலையத்தில் குற்றவாளிகளுடன் உட்கார வைக்கப்பட்ட பாக்யராஜ்!

Published

on

தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகக் காம்போடியா சென்ற போது பாங்காக் விமான நிலையத்தில் தன்னைக் குற்றவாளி போல் நடத்தியதாகப் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

ஔடதம் என்ற திரைப்பட விழாவில் பேசிய இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகக் காம்போடியா செல்லும் போது பாங்காக்கில் இறங்கி விமான மாற்றம் செய்ய வேண்டி இருந்தது.

எனவே பாங்க்காக்கில் விமானம் மாறும் போது தனது பாஸ்பார்ட்டில் சீல் வைக்கப் பக்கம் இல்லை என்பதால் தடுத்து நிறுத்திவிட்டனர். அவர்களுக்கு ஆங்கிலமும் பேச வரவில்லை. காம்போடியா விமானத்தையும் தவறவிட்டுவிட்டேன்.

சரி பாஸ்போர்ட்டில் சீல் வைக்க இடம் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்குத் திரும்ப இந்தியா செல்லுமாறு கூறினர். இந்தத் தகவலை தன் மனைவிக்குத் தெரிவித்து இந்தியாவிற்கு டிக்கெட் புக் செய்யச் சொன்னேன். அப்போது மொபைலும் சார்ஜ் இல்லாமல் ஆப் ஆனது. எனது கிரெடிட் கார்டு மூலம் டிக்கெட் புக் செய்யுமாறு அங்கு உள்ள அதிகாரிகள் கூறினர். ஆனால் எனது மனைவியும் டிக்கெட் புக் செய்துவிட்டால் என்ன செய்வதென்று தான் இந்தியாக்கு போன் செய்ய வேண்டும் என்றேன். உடனே என்னைக் குற்றவாளிகள் அறையில் உட்கார வைத்துவிட்டனர்.

பின்னர் எனது போனை சார்ஜ் செய்த பிறகு என் மனைவி வாட்ஸ்ஆப்-ல் டிக்கெட் புக் செய்து அனுப்பி இருந்ததைக் காண்பித்தும் அவர்கள் என்னை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. என்னிடம் பாஸ்போர்ட்டையும் திருப்பி அளிக்க மறுத்துவிட்டனர் என்று பாரதிராஜா தெரிவித்தார்.

Trending

Exit mobile version