இந்தியா

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கொடுங்கள், ஆனால்… பஞ்சாப் முதல்வர்

Published

on

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கொடுங்கள் ஆனால் அவ்வாறு கொடுக்கும் போது புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் என பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த பகவந்த் மான், ‘பஞ்சாபில் மார்ச் 23ஆம் தேதி முதல் ஊழலுக்கு எதிராக தனி உதவி மையம் அமைக்கப்படும் என்றும் அதற்காக வழங்கப்படும் எண், என்னுடைய தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் .
.
பஞ்சாப் மாநிலத்தில் எந்த அரசு அதிகாரி லஞ்சம் கேட்டாலும் மறுக்காமல் கொடுத்து விடுங்கள் என்றும் ஆனால் அந்த அதிகாரியுடன் மேற்கொள்ளும் உரையாடலை வீடியோ அல்லது ஆடியோவாக பதிவு செய்து எனது வாட்ஸப் எனக்கு அனுப்பி வையுங்கள் என்றும் அதன்பின் விசாரணை செய்யப்படும் என்றும் குற்றம் செய்த யாரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல்வராக பதவியேற்ற முதல் நாளே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள முதல்வரால் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version