உலகம்

3 ஆண்டுகளில் 14 பில்லியன் நன்கொடை.. ஜெஃப் பிஜாஸின் முன்னாள் மனைவியின் தாராளம்

Published

on

அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஜோஸ் அவர்களின் மனைவி மூன்று ஆண்டுகளில் 14 பில்லியன் டாலர் நன்கொடையாக அளித்து உள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் நம்பர் ஒன் இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெஃப் பிஜோஸ் கடந்த 1993 ஆம் ஆண்டு மெக்கென்சி ஸ்காட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் 2019ஆம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது.

விவாகரத்தின் போது மெக்கென்சி ஸ்காட் அவர்களுக்கு அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகள் கிடைத்துள்ளதாகவும் அதன் மதிப்பு சுமார் 33 பில்லியன் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விவாகரத்து பெற்ற பின்னர் அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் தனது கிடைத்த ஜீவனாம்ச தொகையிலிருந்து 14 பில்லியன் டாலர் நன்கொடை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நன்கொடை கேட்டு வருபவர்களின் பின்னணியையும், அவர்களது உண்மையான தேவையையும் ஆய்வு செய்வதற்காகவே இவர் ஒரு குழுவை வைத்துள்ளார் என்றும் அந்த குழுவினர் நன்கொடை கேட்டு வருபவர்களின் பின்னணியை ஆராய்ந்து அவர்களுக்கு உண்மையாகவே நன்கொடை தேவைப்பட்டது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அவர் பணம் கொடுத்து உதவி செய்வார் என்றும் கூறப்படுகிறது.

மெக்கென்சி ஸ்காட் அவர்கள் அமெரிக்காவின் மூன்றாவது மிகப்பெரிய பணக்கார பெண் என்பதும் உலக அளவில் 33வது பணக்காரர் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 100 வலிமையான பெண்கள் பட்டியலில் இவரது பெயர் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version