ஆரோக்கியம்

காலை, மதியம், இரவு.. சாப்பிடச் சரியான நேரம் என்ன?

Published

on

உணவு சாப்பிடுவது என்பது ஒரு சாதாரண விஷயமாக இருந்தாலும், அதில் நாம் செய்யும் சில தவறுகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சாப்பிடுவதில் மிகவும் முக்கியமானது நாம் சாப்பிடும் நேரம்.

எனவே உணவைச் சாப்பிடச் சரியான நேரம் எது என்பதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

காலை

  • காலையில் தூங்கி எழுந்த உடன் 30 நிமிடத்தில் சாப்பிட வேண்டும்.
  • காலை உணவைச் சாப்பிடச் சரியான நேரம் 7 மணி.
  • காலை உணவை மாலை 10 மணிக்கு மேல் தாமதிக்க வேண்டாம்.
  • காலை உணவில் புரதச்சத்து இருப்பதைத் தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மதிய உணவு

  • மதிய உணவைச் சாப்பிடச் சரியான நேரம் மதியம் 12.45 மணி
  • காலை உணவுக்கும் மதிய உணவுக்கு இடையில் சரியாக 4 மணி நேரம் இடைவேளை வேண்டும்.
  • மதிய உணவை மாலை 4 மணிக்கு மேல் தாமதிக்க வேண்டாம்.

இரவு உணவு

  • இரவு உணவை எடுத்துக்கொள்ளச் சரியான நேரம் 7 மணி
  • தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு உணவைச் சாப்பிட்டு இருக்க வேண்டும்.
  • இரவு உணவை உணவை மாலை 10 மணிக்கு மேல் தாமதிக்க வேண்டாம்.
  • தூங்கும் முன்பு சாப்பிடுவது உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும்.

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா?

  • வெற்று வயிற்றில் ஒருபோதும் உடற்பயிற்சி செய்யாதீர்கள் (குறிப்பாக எடை பயிற்சி)
  • உடற்பயிற்சிக்கு முன்பு புரதச் சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சாண்ட்விச் (கோழி, டுனா போன்றவை), புரத பவுடர், முழு கோதுமை ரொட்டியுடன் துருவிய முட்டை, வேர்க்கடலை வெண்ணெய் சாண்ட்விச் போன்ற புரத உணவுகளை உடற்பயிற்சிக்கு முன்பு எடுத்துக்கொள்வது நல்லது.
seithichurul

Trending

Exit mobile version