இந்தியா

இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் எவை எவை? சென்னைக்கு எந்த இடம்?

Published

on

மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சென்னைக்கு எத்தனாவது இடம் என்பதை பார்ப்போம்.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தியாவில் வாழ சிறந்த நகரம் என முதல் நகரமாக பெங்களூரை தேர்வு செய்துள்ளது. இந்த பட்டியலில் சென்னைக்கு நான்காம் இடமே கிடைத்துள்ளது என்பதும் தமிழகத்தில் உள்ள இன்னொரு நகரமான கோவைக்கு ஏழாம் இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சிறந்த நகரம் என்ற பட்டியலில் பெங்களூரு முதலிடத்தை பெற்றுள்ளது. இதனை அடுத்து புனே, அகமதாபாத், சென்னை, சூரத், மும்பை ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் வதோதரா, இந்தூர், கிரேட்டர் மும்பை ஆகிய நகரங்களும் முதல் 10 இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இந்தியாவின் தலைநகர் டெல்லி 13-வது இடத்தைப் பெற்றுள்ளது என்பது துரதிஷ்டமானதே.

அதேபோல் 10 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறந்த நகரங்களில் தமிழகத்தைச் சேர்ந்த சேலம், வேலூர் மற்றும் திருச்சி ஆகிய மூன்று நகரங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version