சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி பட இயக்குனருக்கு பென்ஸ் கார் கொடுத்த தயாரிப்பாளர்!

Published

on

விஜய்சேதுபதி படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவருக்கு தயாரிப்பாளர் ரூபாய் 75 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த தெலுங்கு படம் உப்பன்னா. இந்த திரைப்படத்தில் தேஜ் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் விஜய்சேதுபதியின் வில்லத்தனமான நடிப்பு தெறிக்க வைத்தது. பிரபல தெலுங்கு நடிகர்கள் அவரது நடிப்பு பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் புஜ்ஜிபபுவுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் ரூபாய் 75 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக அளித்துள்ளார். இந்தப் படம் ரூ 100 கோடி வசூல் செய்தது என்பதும் இந்த படத்தில் அவருக்கு சுமார் 60 கோடி ரூபாய் லாபம் என்றும் அதனை அடுத்து அவர் 75 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசாக அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த காரில் தனது நண்பர்களுடன் இயக்குனர் புஜ்ஜிபாபு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version