சினிமா செய்திகள்

பாடிக்கொண்டு இருந்த பென்னி தயாள்.. தலையில் மோதிய ட்ரோன்.. நடந்தது என்ன?

Published

on

சமீபத்தில் பின்னணி பாடகர் பென்னி தயாள் சென்னையில் நடந்த இசை விழா ஒன்று பாடல் பாடி கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருந்த ட்ரோன் ஒன்று பென்னி தயாளின் தலைக்கு மேல் பறந்து வந்து கொண்டிருந்தது. அது அவருடைய தலையின் பின் பகுதியில் எதிர்பாராத விதமாக மோதியது.

இதனால் துணுக்குற்ற பென்னி தயாள், மேடையிலேயே கீழே அமர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சிறு விபத்திற்கு பிறகு என்ன நடந்தது எப்படி இருக்கிறேன் என்பது குறித்து பென்னி தயாள் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “அந்த விபத்திற்கு பிறகு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னை மிகுந்த சிரத்தையுடன் கவனித்துக் கொண்டனர். அதற்கு அவர்களுக்கு நன்றி. அந்த ட்ரோன் என்னுடைய தலையின் பின் பகுதியில் மோதியது. அதை தடுப்பதற்காக தலையை கையை மேலே கொண்டு சென்ற போது விரல்களிலும் அடிபட்டது. இதிலிருந்து சீக்கிரம் குணமாகி விடுவேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

என் பெற்றோருக்கும் நன்றி. இதற்குப் பிறகு எல்லா கலைஞர்களுக்கும் கவனமாக இருக்க வேண்டும் என ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இது போன்ற நிகழ்ச்சிகளில் நீங்கள் பாடி கொண்டிருக்கும் பொழுது, இது போன்ற ட்ரோன் உங்கள் அருகில் வராமல் இருக்கிறதா என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏனெனில் பாடி கொண்டிருக்கும் பொழுது உங்களுடைய அசைவுகளும் அவர்களுடைய இயக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. இதுபோன்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் சான்றிதழ் பயிற்சி பெற்ற ட்ரோன் ஆப்ரேட்டர்களை நியமியுங்கள்.

ஏனெனில் இது போன்ற விபத்து மிகவும் ஆபத்தானது. மூன்றாவது கோரிக்கை நாங்கள் வெறும் கலைஞர்கள் மட்டுமே! விஜய்யோ அஜித் சல்மான்கானோ பிரபாஸோ கிடையாது. நாங்கள் ஏதும் ஆக்ஷன் காட்சிகள் செய்யவில்லை. நாங்கள் பாடல் பாடிக்கொண்டிருக்கிறோம். அதை நீங்கள் நன்றாக படம் பிடித்தால் மட்டும் போதும். இவ்வளவு நெருக்கத்தில் வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என அந்த வீடியோவில் பென்னி தயாள் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version