இந்தியா

ரயில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.50.. அதிர்ச்சியில் பயணிகள்!

Published

on

பெங்களூரு ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் ரயில் டிக்கெட் விலை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 பொது முடக்கம் முடிந்து ரயில் சேவை செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கூட்டம் சேருவதைக் குறைக்க, பிளாட்பார்ம் டிக்கெட் என அழைக்கப்படும் நடை மேடை கட்டணத்தை உயர்த்தி தென் மேற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதை அடுத்து நடை மேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு, பெங்களூரு மெஜஸ்டிக் கேஎஸ்ஆர் ரயில் நிலையம், பெங்களூரூ கண்டோன்மெண்ட், யெஸ்வந்த்பூர் ரயில் நிலையங்களுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் சேருவது குறைக்கப்பட்டும். கொரோனா தொற்று பரவலிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version