இந்தியா

பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவை நேரம் அறிவிப்பு!

Published

on

பெங்களூரூவில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது.

மெட்ரோ ரயில் சேவை தொடங்கினாலும் முன்பு போல காலை முதல் இரவு வரை ரயில்கள் தொடர்ந்து இயங்காது என்பது பயணிகள் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக பர்பிள் வழித்தட மெட்ரோ சேவையை மட்டும் தொடங்கும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம், காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 4:30 மணி முதல் 7:30 மணி வரையிலும் மட்டும் தான் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மெட்ரோவின் க்ரீன் வழித்தடத்தில் செப்டம்பர் 9 முதல் ரயில் சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version